திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (19:16 IST)

‘பீஸ்ட்’ திரைப்படம் பார்க்க ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த திருப்பூர் நிறுவனம்

beast 3rd
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தை முதல் நாளிலேயே பார்க்க ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்
 
இந்த நிலையில் ஐடி நிறுவனம் உள்பட பல நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ‘பீஸ்ட்’ படத்தை பார்ப்பதற்காக விடுமுறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவன ஊழியர்கள் ‘பீஸ்ட்’ படம் பார்ப்பதற்காக ஏப்ரல் 13ஆம் தேதி விடுமுறை என அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்து தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை சந்தோசமாக பார்க்க உள்ளனர் என்பது குறிபிடத்தக்கது