திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:20 IST)

தியேட்டருக்கு இப்படிதான் வரப்போறாங்களோ… விஜய் ரசிகர்களின் பீஸ்ட் சட்டை!

விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்ற ரத்தம் படிந்த வெள்ளை உடையை இப்போது பல விஜய் ரசிகர்களும் வாங்கியணிய ஆரம்பித்துள்ளனர்.

தளபதி விஜய்யின் பீஸ்ட், திரைப்படத்திற்கு 800 முதல் 850 திரையரங்குகள் கிடைத்துள்ளதாகவும், கே.ஜி.எப்2  படத்திற்கு அதிகபட்சமாக 200 திரையரங்குகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பீஸ்ட் படத்துக்காக சிறப்புக் காட்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த சிறப்புக் காட்சிகளில் காலைக் காட்சி மட்டும் இல்லாமல் நள்ளிரவுக் காட்சிகளும் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நள்ளிரவுக் காட்சிகளுக்கு சுமார் 2000 ரூபாய் வரை டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டரில் விஜய் அணிந்திருந்த ரத்தம் படிந்த வெள்ளை சட்டைப் போலவே இப்போது விஜய் ரசிகர்களும் வாங்கி அணிய ஆரம்பித்துள்ளனர். இது சம்மந்தமாக சமூகவலைதளங்களில் சில புகைப்படங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.