ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2022 (12:09 IST)

’கே.ஜி.எப் 2’ வெற்றி பெற திருப்பதியில் வழிபாடு நடத்திய யாஷ்!

Yash
பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த ’கே.ஜி.எப் 2’ திரைப்படம் வரும் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சென்னை உள்பட நாடு முழுவதும் பல நகரங்களுக்கு யாஷ்  சென்று வருகிறார்
 
இந்த நிலையில் இன்று அவர் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார். கேஜிஎப் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் வழிபாடு செய்ததாக கூறப்படுகிறது 
 
விஜய் நடித்த பீஸ்ட் படத்துடன் யாஷ் நடித்த கேஜிஎப் திரைப்படம் மோதுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது