வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 4 மார்ச் 2021 (16:03 IST)

தமிழ்ப் படத்தில் மீண்டும் நடிக்கும் மலையாள நடிகர்!

மலையாளத்தில் அங்கமாலி டைரிஸ் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான அப்பாணி சரத் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

அங்கமாலி டைரிஸ் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனிக்கப்பட்ட நடிகராக மாறினார் அப்பாணி சரத். தமிழில் செக்கச் சிவந்த வானம் மற்றும் சண்டக்கோழி 2 ஆகிய படங்களில் நடித்தார். மேலும் ஆட்டோஷங்கரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆட்டோ ஷங்கர் வெப் சீரிஸிலும் நடித்தார். இதன் மூலம் தமிழக ரசிகர்களுக்கு அறிந்த முகமானார்.

இந்நிலையில் இப்போது ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகும் புதிய தமிழ்ப் படமொன்றில் நடிக்க உள்ளார். இந்த படத்தை மலையாள இயக்குனரான வினோத் குருவாயூர் இயக்க உள்ளார்.