மல்லுவுட்டை விட டோலிவுட்டே பெட்டர்: மலையாள நடிகை கருத்து!!
மலையாள நடிகை அனு இம்மானுவேல் மிஷ்கின் இயக்கிய துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தெலுங்கு படங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் தெலுங்கு படங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார். அவர் நடிப்பில் தெலுங்கில் இரண்டு படங்கள் வெளியானதால், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிகின்றதாம்.
இது குறித்து அனு இம்மானுவேல் கூறியதாவது, எனக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. வாய்ப்புகள் வருவதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.
என் முதல் படத்தில் மாமய்யா என்று கூற நான் சிரமப்பட்டேன். ஆனால் தற்போது எனக்கு தெலுங்கு மொழி நன்றாக புரிகிறது. நிறைய தெலுங்கு படங்களில் நடிப்பதால் ஹைதராபாத்தில் செட்டிலாக விரும்புகிறேன்.
எனக்கு இங்குள்ளவர்களை பிடித்துள்ளது. மலையாள திரையுலகை விட டோலிவுட் சிறப்பாக உள்ளது. இங்கு தான் எனக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கிறது என தெரிவித்துள்ளார்.