1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (17:16 IST)

வார்த்தையை விட்ட தமன்னா: ஆப்படித்த டோலிவுட்!!

நடிகை தமன்ன பாகுபலி 2 படத்தை பெரிதாக எதிர்ப்பார்த்த நிலையில், அந்த படம் அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் ராஜமெளலியின் மீது கோபத்திலும் இருந்தார் தமன்னா.


 
 
இந்நிலையில், பாகுபலிக்கு அடுத்த பெரிய அளவில் படங்கள் ஏதும் வராததால், பாகுபலி படத்தில் எனக்கு நிறைவான கதாபாத்திரம் தரப்படவில்லை, இனி ஹிந்தி படங்களில்தான் கவனம் செலுத்தப்போகிறேன் என்று தமன்னா கூறினார்.
 
இதனால் தெலுங்கு பட உலகினர் அவரை டீலில் விட்டுவிட்டார்களாம். ஹிந்தியை நம்பி சென்ற நிலையில் அங்கும் யாரும் தமன்னாவை கண்டுகொள்ளவில்லை. 
 
இதனால் வேறுவழியின்றி நான் அப்படியொரு பேட்டியே கொடுக்கவில்லை. அது வெறும் வதந்தி என கூறினார். இந்நிலையில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும், படத்தில் குத்துபாடலுக்கு நடனமாட வாய்ப்பு வந்ததாம்.
 
இதனையும் விட்டுவிட்டால் டோலிவுட்டில் நம் இடம் காலி ஆகிவிடும் என நினைத்து அதற்கு ஒப்புக்கொண்டுள்ளாராம் தமன்னா.