வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (17:26 IST)

வளரும் நடிகைகளுக்கு நள்ளிரவில் போன்கால்: ரகுலால் டோலிவுட் ஷாக்!!

தெலுங்கில் முன்னணி நடிகையான ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழில் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிக்கிறார். 


 
 
தற்போது டோலிவுட்டில் இளம் நடிகைகளின் போட்டி அதிகரித்து வருகிறது. நடிகை சாய் பல்லவி, நிவேதா தாமஸ், கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் தற்போது டோலிவுட்டில் முன்னணி இடத்துக்கு போட்டிபோட்டுக் கொண்டிருக்கின்றனர். 
 
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் சாய் பல்லவியை செல்போனில் அழைத்து ஃபிடா படம் பார்த்தேன் நீங்கள் நன்றாக நடித்துள்ளீர்கள் என பாராட்டியுள்ளார் ரகுல்.
 
இதற்கு முன்னரும் நிவேதா தாமஸையும் இதேபோல் போனில் அழைத்து பாராட்டியுள்ளாராம் ரகுல். நடிகைகள் ஒருவர் மேல் ஒருவர் பொறாமை படும் காலத்தில் ரகுலின் இந்த செயல் டோலிவுட்டுக்கு ஷாக் கொடுத்துள்ளது.