வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 25 அக்டோபர் 2017 (20:34 IST)

நான் யாருன்னு தெரியுமா? சாய் பல்லவி கோபம்!!

பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கேரக்டரில் நடித்த சாய் பல்லவி  அந்த படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர். தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் பிஸியாக நடித்து வருகிறார். 


 
 
தமிழில் கரு என்ற படத்தில் நடித்துவருகிறார். அதனை தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். 
 
அதேபோல், தெலுங்கில் அவர் அறிமுகமான ஃபிடா படமும் பெரிய வெற்றி பெற்றதால் அடுத்து நானி ஜோடியாக எம்சிஏ படத்தில் நடித்துவருகிறார். 
 
இந்நிலையில், தெலுங்கு ஊடகங்கள் அனைத்து அவரை மல்லு பெண் (மலையாள பெண்) என்றே எழுதி வருகின்றன. எம்சிஏ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவர் சாய் பல்லவியை மலையாள பெண் என்று குறிப்பிட்டார். 
 
இதனால் கோபப்பட்ட அவர், நான் மலையாளப் பெண் அல்ல, தமிழ் பெண் என்று தெரிவித்துள்ளார். மேலும் தான் கோயமுத்தூரில் பிறந்ததாகவும் கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.