திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 21 டிசம்பர் 2018 (14:38 IST)

இன்னும் இரண்டு நாட்களில் 'மாரி 3' குறித்த அறிவிப்பு

தனுஷு, காஜல் அகர்வால் நடித்த 'மாரி' படத்தின் இரண்டாம் பாகமான 'மாரி 2' இன்று வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நாளில் இப்படம் திரைக்கு வந்துள்ளது.


 
இதில் தனுஷ்க்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார், இவர்களுடன் வரலட்சுமி, கிருஷ்ணா, ரோபோ ஷங்கர், மலையாள நடிகர் டோவினோ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 
 
இப்படம் குறித்து ரோபோ சங்கர் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் நடிகர் தனுஷுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். 'மாரி 3' குறித்த அறிவிப்பு இன்னும் இரண்டு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். அதை இயக்குனர் பாலாஜி மோகனே அறிவிப்பார்" என தெரிவித்துள்ளார்.