திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 3 மார்ச் 2022 (20:26 IST)

''லெஜண்ட் சரவணா'' அண்ணாச்சி பட ஃபர்ஸ்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

லெஜண்ட் சரவணா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்லுக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் மிகப்பெரிய ஜவுளி சாம்ராஜ்ஜியன் நடத்தி வருபவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அருள்சரவணன். தனது கடைகளின் விளம்பரத்திற்கு அவரே மாடலாக நடித்து வந்த நிலையில். தன்னை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் முயற்சியாக ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். அந்த படத்தை அவரை வைத்து விளம்பரப் படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி இயக்குனர்கள் இயக்கி வருகின்றனர். இசைக்கு ஹேரிஸ் ஜெயராஜ், பாடலுக்கு வைரமுத்து, ஒளிப்பதிவு வேல்ராஜ்   என முன்னணி கலைஞர்களை அண்ணாச்சி ஒப்பந்தம் செய்தார்.

இ ந் நிலையில்,இப்படத்தின்  மோசன் போஸ்டர் மற்றறும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் 4 ஆம் தேதி வெள்ளிகிழமை( நாளை)  ரிலீஸாகவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.