செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : சனி, 29 பிப்ரவரி 2020 (15:37 IST)

அண்ணாத்த பட பர்ஸ்ட் லுக் இதுவா? இணையத்தில் பரவும் வெறித்தனமான புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக மீனா மற்றும் குஷ்பு நடித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் ரஜினிக்கு மகள் அல்லது தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
டி இமான் இசையில் உருவாகும் இந்த படத்தில் சதிஷ், சூரி, பிரகாஷ் ராஜ், உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதற்கிடையில் அண்மையில் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. அண்மையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் டைட்டில் "அண்ணாத்த" என்று cast and crew குறித்த தகவல் அண்மையில் வெளியாகியுள்ளது.
 
இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் அண்ணாத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என கூறி வேட்டி சட்டையில் வெறித்தனமாக இருக்கும் தலைவரின் புதிய புகைப்படமொன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் டிசைன் செய்துள்ள இந்த போஸ்டர் பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.