1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (18:35 IST)

ஜெய்யுடனான காதல்... மனம் திறந்த அஞ்சலி!!

அஞ்சலி மற்றும் ஜெய் காதலித்து வருவதாக பேசப்பட்டு வரும் நிலையில், இது குரித்து அஞ்சலி தற்போது பேசியுள்ளார்.


 
 
அஞ்சலி மற்றும் ஜெய் காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. 
 
தற்போது இருவரும் பலூன் படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் இவர்களது காதல் நெருக்கம் அதிகரித்துவிட்டதாக படக்குழுவினர் பேசியதாகவும் செய்திகள் வெளியானது.
 
இந்நிலையில், ஜெய்யை தனது லிஸ்ட்டிலேயே வைக்காதது போல அஞ்சலி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, காதல் - கல்யாணம் பற்றி நினைக்க எனக்கு நேரம் இல்லை. என் மனதுக்கு பிடித்தவரை நான் இன்னும் பார்க்கவில்லை. தேடிக்கொண்டு இருக்கிறேன். 
 
என்னையும் ஜெய்யையும் சேர்த்து வைத்து நிறைய செய்திகள் வந்து விட்டன. எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதையும் நிர்ணயிக்க முடியாது. அதே போல் நான் அரசியலுக்கு வருவதாக சொல்வதில் உண்மை இல்லை என கூறியுள்ளார்.