திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Murugan)
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2017 (15:19 IST)

விஜய் ஆண்டனிக்கு ஜோடியான அஞ்சலி...

‘காளி’ படத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார் அஞ்சலி


 

 
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துவரும் படம் ‘காளி’. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு மொத்தம் 4 ஹீரோயின்கள். சுனைனா, ‘படைவீரன்’ படத்தில் விஜய் யேசுதாஸுக்கு ஜோடியாக நடித்த அம்ரிதா இருவரும் ஏற்கெனவே நடித்துவிட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு ஹீரோயின்கள் யார் எனத் தெரிந்துவிட்டது.
 
அஞ்சலி மற்றும் கன்னடத்தைச் சேர்ந்த ஷில்பா மஞ்சுநாத் இருவரும் தான் அந்த மீதமுள்ள ஹீரோயின்கள். கதையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தும் கேரக்டரில் அஞ்சலி நடித்துள்ளார். ஷில்பா மஞ்சுநாத், சிட்டி கேர்ளாக நடித்துள்ளார். 4 ஹீரோயின்கள் இருந்தாலும், 4 பேருக்குமே சரியான அளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் கிருத்திகா உதயநிதி என்கிறார்கள்.