1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (13:17 IST)

“எல்லோருக்கும் காதல் தோல்வி இருக்கிறது” – ஆத்மிகா

எல்லோருக்கும் காதல் தோல்விக் கதைகள் இருப்பதாக ஆத்மிகா தெரிவித்துள்ளார்.


 

 
‘ஹிப் ஹாப் தமிழா’ எழுதி, இயக்கி, ஹீரோவாக அறிமுகமான படம் ‘மீசைய முறுக்கு’. படம் நன்றாகப் போனது. குறிப்பாக, இளைஞர்களுக்கு படம் ரொம்பப் பிடித்துவிட்டது. இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஆத்மிகா. இவர், கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்.

“படத்தில் என்னுடைய கேரக்டர் நிறைய பசங்களுடன் கனெக்ட் ஆக இருப்பதாகத் தெரிவித்தனர். அவர்களுடைய காதலியைப் பிரதிபலிப்பதாக என்னுடைய கேரக்டர் இருந்ததாகக் குறிப்பிட்டனர். இன்றைய காலகட்டத்தில், எல்லோருக்கும் காதல் தோல்விக் கதைகள் இருக்கின்றன. எனவே, அவர்களுடன் கனெட்க் ஆவது எளிதாக இருக்கிறது. சில பெண்கள் என்னுடைய உடை, ஹேர், மேக்கப் குறித்தெல்லாம் பேசினர். ஸ்கிரீனில் தோன்றும்போது எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டேன்” என்கிறார் ஆத்மிகா.

‘துருவங்கள் 16’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அடுத்து இயக்கிவரும் ‘நரகாசூரன்’ படத்தில் கமிட்டாகியிருக்கிறார் ஆத்மிகா. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண் நடிக்கும் இந்தப் படத்தில், சுந்தீப் கிஷணுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆத்மிகா.