திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:01 IST)

ஆரவ் உடன் காதலும் இல்லை ஒன்னும் இல்லை: ஓவியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆரவ் உடன் காதலும் இல்லை ஒன்னும் இல்லை: ஓவியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை தற்போது பெற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஓவியா சக போட்டியாளரான புதுமுக நடிகர் ஆரவ்வை காதலித்தார்.


 
 
ஆரவ்வின் புறக்கணிப்பால் ஓவியாவுக்கு மன அழுத்தம் ஏற்பட்டது. இதனையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானாக முன் வந்து வெளியேறினார் ஓவியா. அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனம் பலமுறை ஓவியாவை தொடர்புகொண்டும் அவர் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வர மறுத்துவிட்டார்.
 
அதன் பின்னர் வெளியே சென்ற ஓவியாவை அவரது ரசிகர் பட்டாளம் சூழந்து கொண்டது, அப்போதும் தான் ஆரவ்வை காதலிப்பதாக கூறிவந்தார். ஆனால் தற்போது தான் யாரையும் காதலிக்காமல் சந்தோஷமாக இருப்பதாக ஓவியா கூறியுள்ளார்.


 


ஓவியா தனது டுவிட்டர் பக்கத்தில், உறவு நிலை: யாரையும் காதலிக்கவில்லை மற்றும் சந்தோஷமாக உள்ளேன் என கூறியுள்ளார். ஓவியாவின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்கள் சந்தேஷத்தில் டுவீட் செய்து வருகின்றனர். காரணம் தொடக்கம் முதலே ஓவியா ஆரவ்வை விரும்புவதை அவரது ரசிகர்கள் விரும்பவில்லை. தற்போது ஓவியாவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியை அளித்துள்ளது.