ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 29 டிசம்பர் 2020 (16:02 IST)

என்னால் தான் என் அப்பா.... குற்ற உணர்ச்சியில் பரிதவிக்கும் அனிதா சம்பத்!

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் அனிதா சம்பத் சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
 
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலர் பிரபாகரன் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வரும் பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்த அனிதா கடந்த ஞாயிற்று கிழமை தான் எவிக் ஆகி வெளியில் வந்தார். 
 
இந்நிலையில் இன்று திடீரென அவரது தந்தை சம்பத் இன்று காலை உயிரிழந்துவிட்டார். அவர் தரிசனத்திற்காக தனது மகனுடன் சீரடி சென்று சென்னை திரும்பும் வழியில் ரயிலில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது.
 
தந்தையின் மரணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனிதா, " எனது தந்தை ஆர் சி சம்பத் வயது முதிர்ச்சி காரணமாக திடீரென்று காலமாகி இருக்கிறார். அவருக்கு வயது 62. அவர் இல்லை என்பதை தற்போது என்னால் நம்ப முடியவில்லை. அவரை சந்தித்து 100 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. நான் பிக்பாஸில் இருந்து வந்தவுடன் அவர் சீரடி சென்றிருந்தார். 
 
அவரது செல்போன் தொடர்பு கொள்ள முடியாததால் நான் அவரிடம் போனில் கூட நான் பேசவில்லை.  இன்று காலை அவரது இறந்துவிட்ட சேதியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இதை என்னால் நம்ப முடியவில்லை. அப்பா, நீ வீட்டிற்கு நடந்து வரணும், உன்கிட்ட நிறைய பேசனும், உன் குரலை கேட்டு நூறுநாள் மேலாட்சி. 
 
தெரிஞ்சிருந்தா முன்னாடியே எலிமினேட் ஆகி அப்பா கூட கொஞ்சநாள் இருந்திருப்பேன். விஜய் டிவி ஷோ திரும்ப வரும் என் அப்பா இனி திரும்ப வர மாட்டாரு. இந்த வாரம் சேவாகி இருந்தா கடைசியாக கூட அப்பாவை பார்த்து இருக்க முடியாது. 
 
வாழ்க்கை என்பது மிகவும் கணிக்க முடியாத ஒன்று. இதெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் நடக்கிறது. உங்களின் பெற்றோர்களை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள். நான் என் அப்பாவை நான் மிஸ் பண்ணிட்டேன் என்பதில் எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது என மன வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.