எனக்கே புதுசா இருக்கு... இவ்ளோவ் நாள் இப்படி இருந்ததே இல்ல - அனிதா கணவர் வருத்தம்!
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் அனிதாவின் கணவர் தனது மனைவி குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு உருக்கமான பதிவினை இட்டுள்ளார். அதில், " இன்றுடன் என் மனைவியை பிரிந்து 30 நாள் ஆகிறது. நாங்கள் காதலிக்க ஆரம்பித்த நாள் முதல் திருமணமாகியும் இத்தனை வருடங்களில் இவ்வளவு நாள் பிரிந்து இருந்ததே இல்லை.
இதெல்லாம் எனக்கே புதிதாக இருக்கிறது. என் செல்லம்மாவை மிகவும் மிஸ் பண்றேன் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அனிதா சம்பத் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி பிரபலமடைந்தவர். சர்க்கார் படத்தில் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட பல படத்தில் நடித்திருந்தார்.
இதற்கிடையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். இந்த திருமண செய்தி அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்லாது மீம்ஸ் கிரியேட்டர்களும் கவலையுடன் மீம்ஸ்களை போட்டு இணையவாசிகளின் கவனத்தை திருப்பினர். இதன் மூலம் கிடைத்த பேரும் புகழினால் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்துள்ளது.