1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (16:44 IST)

தெலுங்கு முன்னணி நடிகர்களின் விருப்பப் பட்டியலில் அனிருத் - குவியும் வாய்ப்புகள்

இசையமைப்பாளர் அனிருத் இப்போது தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் படத்துக்கு இசையமைக்க உள்ளார்.

தமிழ் சினிமாவின் ராக்ஸ்டாரான இசையமைப்பாளர் அனிருத்துக்கு இப்போது தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகளைக் குவித்து வருகிறார். நானியின் ஜெர்ஸி படத்தில் பணிபுரிந்த இவர் இப்போது ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் கொரட்டாலா சிவா இயக்கும் ஜூனியர் என் டி ஆர் 30 படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

ஏற்கனவே பவன் கல்யாண் படத்துக்கும் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். கொரட்டாலா சிவா இயக்கும் படத்துக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட அனிருத் இப்போது பாடல் மெட்டமைக்கும் பணிகளை தொடங்கி விட்டாராம்.