1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 28 ஆகஸ்ட் 2021 (11:34 IST)

வடசென்னை ராஜன் வகையறா! அமீர் வேடத்தில் கென் கருணாஸா?

வடசென்னை படத்தின் ப்ரிக்வள் எடுக்க இயக்குனர் வெற்றிமாறன் முயற்சி செய்துவருவதாக சொல்லப்படுகிறது.

வடசென்னை படத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த பாத்திரமாக அமிரின் ராஜன் பாத்திரம் அமைந்தது. ஆனால் படத்தின் நீளம் கருதி அவரின் காட்சிகள் குறைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் ராஜனின் வாழ்க்கையை மட்டும் தனியாக ராஜன் வகையறா என்று எடுக்க வேண்டும் என வெற்றிமாறன் விரும்பினார். அதற்கான வேலைகள் இப்போது தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. ராஜனின் பதின் பருவக் காட்சிகளில் கென் கருணாஸை நடிக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகிறது.