1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (06:54 IST)

மகள் தயாரிக்கும் புதிய வெப் சீரிஸை தொடங்கி வைத்த ரஜினிகாந்த்!

ரஜினிகாந்தின் இளையமகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் கோச்சடையான் படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.  அதன் பிறகு தனுஷ் நடித்த வேலையிலலாத பட்டதாரி 2 படத்தை இயக்கினார். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் கோவா உள்ளிட்ட திரைப்படங்களையும் தயாரித்திருந்தார். ஆனால் அவர் தயாரித்த படங்கள் வணிக ரீதியில் தோல்வி அடைந்ததால் தொடர்ந்து தயாரிப்பைக் கைவிட்டார்.

இதையடுத்து இப்போது ஆறு ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் சினிமாவில் கால்பதித்துள்ளார். அமேசான் ப்ரைம் ஓடிடிக்காக புதிய வெப் சீரிஸ் ஒன்றுக்கு ஷோ ரன்னராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த சீரிஸில் கதாநாயகனாக அசோக் செல்வன் நடிக்க, நோ ஆப்ரஹாம் என்பவர் இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த தொடரின் ஷூட்டிங்கை தொடங்கி வைத்துள்ளார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இது சம்மந்தமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.