1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 7 செப்டம்பர் 2023 (07:41 IST)

தென்னிந்திய சினிமாவைப் பார்த்து இந்தி சினிமா கற்றுக்கொள்ள வேண்டும்.. கங்கனா கருத்து!

ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் சந்திரமுகி 2 படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. மரகதமணி இசையமைக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய பி வாசுவே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ள படத்தின் ப்ரமோஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் சந்திரமுகி 2 படம் பற்றி பேசியுள்ள கங்கனா “தாம்தூம் படத்துக்குப் பிறகு நான் நேரடியாக நடிக்கும் தமிழ்ப் படமாக சந்திரமுகி 2 அமைந்துள்ளது. நான் தமிழில் அதிகம் நடிக்காதது ஏன் என்று இயக்குனர்களிடம்தான் கேட்க வேண்டும்.

இந்த படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் நடிகைகளுடன் நன்றாக பழகிவிட்டேன்.  பிரேக் நேரத்தில் கூட யாரும் கேரவனுக்குள் செல்லாமல்  ஷூட்டிங்கை பார்ப்பார்கள். இந்த கலாச்சாரத்தை இந்தி சினிமா உலகம் கற்றுக்கொள்ள வேண்டும். தென்னிந்திய உணவு மற்றும் கலாச்சாரம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது,” எனக் கூறியுள்ளார்.