திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 27 ஏப்ரல் 2023 (12:04 IST)

குஷ்புவை அடுத்து சமந்தாவிற்கு கோவில் கட்டிய ரசிகர்.. வைரல் புகைப்படம்..!

தமிழ் திரையுலகில் குஷ்புவுக்கு மதுரையில் ரசிகர்கள் சேர்ந்த கோவில் கட்டிய நிலையில் தற்போது நடிகை சமந்தாவுக்கு ரசிகர் ஒருவர் கோயில் கட்டிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா என்பதும் இவரது நடிப்பில் உருவான ’சாகுந்தலம்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் சமந்தாவிற்கு சந்தீப் என்ற ரசிகர் ஆந்திராவில் கோவில் கட்டி உள்ளதாக தெரிகிறது. அந்த ரசிகர் ஒரு அறக்கட்டளை மூலம் பல சேவைகள் செய்து வருவதை அடுத்து அவர் மீது சமந்தாவிற்கு மதிப்பு கூடியது. இதனை அடுத்து தனக்கு அவ்வப்போது வாழ்த்து தெரிவித்து வரும் சமந்தாவுக்கு கோயில் கட்ட முடிவு செய்தேன் என்றும் எங்கள் வீட்டில் உள்ள ஒரு பகுதியை ஒதுக்கி அவருக்கு கோவில் கட்டி வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார். 
 
தற்போது சமந்தா கோவிலின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் நாளை இந்த கோவில் திறப்பு விழா என்றும் அவர் கூறியுள்ளார். நடிகை சமந்தாவுக்கு ரசிகர் ஒருவர் கோவில் கட்டிய செய்தி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran