1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. thiruthani murugan temple festival

திருத்தணி முருகன் கோவில் தெய்வானை திருக்கல்யாணம்: தேதி அறிவிப்பு..!

Thiruthani
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் தெய்வானை திருக்கல்யாணம் மே இரண்டாம் தேதி நடைபெறும் என்றும் தீர்த்த வாரியுடன் சித்திரை திருவிழா மே நான்காம் தேதி உடன் முடிவடையும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 
 
ஒவ்வொரு ஆண்டும் திருத்தணி கோவிலில் சித்திரை திருவிழா விசேஷமாக நடக்கும் என்பதும் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தற்போது சித்திரை மாத பிரமோற்சவ விழா நடைபெற்று வரும் நிலையில் நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இதனை அடுத்து தேர் திருவிழா மே ஒன்றாம் தேதியும் தெய்வானை திருமணம் மே இரண்டாம் தேதியும் தீர்த்தவாரியுடன் சித்திரைத் திருவிழா மே நான்காம் தேதியுடன் முடிவடைகிறது என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு உதவிகள் தேடி வரும்! – இன்றைய ராசிபலன் (26.04.2023)!