நான் வாய் திறந்தால் உன் மானம் போயிடும்... சமந்தாவை எச்சரித்த தயாரிப்பாளர்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா கடைசியாக குணசேகர் இயக்கத்தில் காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள சகுந்தலம் எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான புராணத் திரைப்படமான சகுந்தலம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய அளவில் செலவு செய்து, ப்ரோமோஷன் செய்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. ரூ. 60 கோடிக்கு எடுத்த இத்திரைப்படம் இதுவரை வெறும் 10 கோடி வசூல் ஈட்டியுள்ளது
இது குறித்து பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு சமந்தாவை மோசமாக சாட்டியிருந்தார். அந்த பதிவில் “சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. அவர் யசோதா மற்றும் சாகுந்தலம் பட ப்ரமோஷன்களில் கண்கலங்கி பேசி, வெற்றிப் படமாக்க முயற்சி செய்தார். ஆனால், எல்லா நேரமும் மலிவான உத்தி பலிக்காது.” எனப் பேசியிருந்தார்.
அவருக்குப் பதிலளித்துள்ள சமந்தா “காதில் ஏன் அதிக முடி முளைக்கிறது என கூகுளில் தேடினேன். அதற்கு ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருப்பதுதான் காரணம் என வந்தது. நான் யாரை சொல்கிறேன் என உங்களுக்கு தெரியும்” எனக் கூறி பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் சமந்தாவின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ள சிட்டி பாபு,
எனது பெயர் குறிப்பிடப்படாததால் சமந்தாவின் பெயரையும் குறிப்பிடவில்லை. என் காதில் உள்ள முடியைப் பற்றி பேசாமல், என் வார்த்தைகளில் உள்ள நேர்மையைப் பற்றி பேசினால் நன்றாக இருந்திருக்கும். நான் வாய் திறந்தால் சமந்தாவின் மானம் போய்விடும் என பதிலடி கொடுத்துள்ளார்.