லியோ படத்துக்காக இதுவரை வாங்காத சம்பளத்தை வாங்கிய ஸ்டண்ட் மாஸ்டர்கள்!
லியோ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக இருந்த விஜய் நடித்துள்ள லியோ படம் நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. அண்டை மாநிலங்களில் காலை ஐந்து மணிக்கே காட்சிகள் திரையிடப்பட்டன. அதனால் தமிழ்நாட்டு ரசிகர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று படத்தை பார்த்துள்ளனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டன.
இந்நிலையில் முதல் நாளில் மட்டும் 148.5 கோடி ரூபாய் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த படத்தின் பாசிட்டிவ் அம்சமாக அன்பறிவ் மாஸ்டர்களின் ஸ்டண்ட் காட்சிகளும் அனிருத்தின் பின்னணி இசையும் சிலாகிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க அன்பறிவ் மாஸ்டர்களுக்கு சம்பளமாக 7 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.