1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Thug life was screened to Kamalhaasan the day before release

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

தக் லைஃப் திரை விமர்சனம்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, அசோக் செல்வன் என பலர் நடித்த ‘தக் லைஃப்’ படம் கடந்த 5 ஆம் தேதி ரிலீஸானார். இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கமல்ஹாசன், ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மணிரத்னம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன். ஆனாலும் முதல் நாளில் இந்த படம் 19 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. எதிர்மறை விமர்சனங்களால் இரண்டாம் நாளில் வசூல் 8 கோடி ரூபாய் அளவுக்கு பாதியாகக் குறைந்தது.

படம் குறித்து சமூகவலைதளங்களில் நெகட்டிவ்வான விமர்சனங்கள் படத்தின் வசூலைப் பாதிக்கின்றன. இந்நிலையில் படம் தயாராகி அதைக் கமல்ஹாசனே ரிலீஸுக்கு ஒரு நாள் முன்புதான் பார்த்தாராம். இயக்குனர் மணிரத்னம் கடைசி நேரத்தில் கமல் மற்றும் சிம்பு ஆகியோருக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டியதாக சொல்லப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!