புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vm
Last Updated : திங்கள், 18 மார்ச் 2019 (15:47 IST)

அனபெல்' மூன்றாவது பாகம் ஜூனில் ரிலீஸ் தலைப்பும் அறிவிப்பு

ஹாலிவுட்டில் பொம்மையை வைத்து ரசிகர்களை அய்யோ அம்மா என அலற வைத்த  `தி கான்ஜூரிங்'. படத்தை யாரும் மறந்து இருக்க முடியாது.  அந்த  கதையை வைத்தே அனபெல் என்ற பெயரில் இரண்டு பாங்கள் வெளியாகி விட்டன.
தற்போது அனபெல் 3வது பாகம் தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் ஜுன் மாதம் 28ம் தேதி வெளியாக உள்ளது.  கேரி டௌபர்மேந்தான் இப்படத்தை இயக்கி உள்ளார். ரசிகர்களை மிரள வைக்க காத்திருக்கும் கேரி, திரில்லான பல விஷயங்களை படத்தில் சேர்த்துள்ளார். 
 
அடுத்து என்ன என்று ஏங்க வைக்கும் கதையுடனும், விறுவிறுப்பான நகர்வுடனும் உங்களை நுனி சீட்டின் நுனிக்கே இயக்குனர் கேரி உட்கார வைக்க காத்திருக்கிறது. ஹாலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் அனபெல் மூன்றாம் பாகத்தின் பெயரை படத்தின் தயாருப்பாளரும் `தி கான்ஜூரிங்' இயக்குனருமான ஜேம்ஸ் வான் அறிவித்துள்ளார் .  'அனபெல் கம்ஸ் கோம்' என பெயர் வைத்துள்ளார். ஜுன் 28ம் தேதி திரைக்கு வரும் என அறிவித்துள்ளார்.