ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2024 (17:37 IST)

வெளியானது விஜயின் கடைசி படத்தின் அப்டேட்.! தீப்பந்தத்தை ஏந்தி நிற்கும் போஸ்டர்.!!

Vijay Movie
நடிகர் விஜய்யின் 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை கேவிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச். வினோத் இந்த படத்தை இயக்கவுள்ளார். 

இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கப் போகிறார் என்கிற அறிவிப்பை கேவிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் விஜயின் 69 திரைப்படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். 

விஜய் கையில் தீப்பந்தத்தை ஏந்திக் கொண்டு இருப்பது போன்ற போஸ்டருடன்  69 படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.