செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 14 ஜனவரி 2024 (12:35 IST)

ராம ராஜ்யத்தை எதிர்ப்பவர்கள் அரசியல் அமைப்பையே எதிர்ப்பவர்கள் ஆவார்கள்: துணை ஜனாதிபதி

ராம ராஜ்யத்தை எதிர்ப்பவர்கள் அரசியலில் அமைப்பையே எதிர்ப்பவர்கள் ஆவார்கள் என துணை ஜனாதிபதி  ஜக்தீப் தன்கர் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
 
 வரலாறு தெரியாதவர்கள் தான் ராமர் ஒரு கற்பனையான உருவம் என்று சொல்வார்கள். நமது அரசியல் சட்டத்தில் 20க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அதில் ராமர் லட்சுமணன் சீதை படங்கள் இருக்கின்றன. ராமராஜ்யம் என்பது ஒவ்வொரு இந்தியருக்கும் ஏற்பட்டுள்ள உணர்வு. 
 
இந்திய அரசியல் அமைப்பிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு ராமரை அவமதிப்பவர்கள் அரசியலமைப்பை அவமதிப்பதற்கு சமம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
 
அனைத்து பிரிவினரும் ஒற்றுமையாக இருக்கும் போது தான் சமுதாய ஆரோக்கியமாக வளரும் என்றும் தெரிவித்துள்ளார்.  சனாதனத்தை மீறி ராமர் கோவில் திறக்கப்படுவதாக சில சங்கராச்சாரியார்கள் ராமர் கோவில் திறப்பு விழாவை  புறக்கணித்ததற்கும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva