ராமர் கோயில் கட்டும் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது: காங்கிரஸ் பிரமுகர் கருத்தால் பரபரப்பு..!
ராமர் கோயில் காட்டுவதற்கு பிரதமர் மோடி எடுத்த முயற்சிகள் பாராட்டுக்கு உரியது என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் வரும் 22 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில் இந்த கோவில் திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளது. மேலும் இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நடத்தும் விழா என்றும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இமாச்சலப் பிரதேச காங்கிரஸ் தலைவர் வீரபத்திர சிங் மனைவி பிரதீபா சிங் என்பவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பிரதமர் மோடியின் முயற்சி பாராட்டுக்குரியது என்று தெரிவித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தின் மக்கள் தொகையில் 98 சதவீதம் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் ராமர் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்கள் என்றும் எங்கள் மதம் முன்னேற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் பிரதிபாசிங் தெரிவித்துள்ளார். அவரது கருத்தால் காங்கிரஸ் கட்சியில் வரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Edited by Mahendran