வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (21:24 IST)

அமிதாப் அறிவுரையை மீறும் ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கிய தர்பார் திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இணையதளங்களை கலக்கி வருகிறது. இந்த டிரைலர் வெளியான ஒரு சில நிமிடங்களில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பெற்று அசத்தி வருகிறது
 
இந்த நிலையில் இன்று மாலை நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் ஏஆர் முருகதாஸ் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் ’அமிதாப்பச்சன் மூன்று முக்கிய அறிவுரைகளை கூறி உள்ளதாக தெரிவித்தார்
 
தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும், எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும், அரசியலில் நுழையக் கூடாது இந்த மூன்று விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அமிதாப்பச்சன் தனக்கு அறிவுரை வழங்கியதாக ரஜினிகாந்த் கூறினார்
 
அமிதாப்பின் இந்த அறிவுரைகளில் இரண்டு அறிவுரைகளை தற்போது வரை ரஜினிகாந்த் கடைபிடித்து வரும் அதே தான் மூன்றாவது அறிவுரையை மீறி இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அரசியலில் நுழையக் கூடாது என்று அமிதாப் பச்சன் கூறிய அறிவுரையை மட்டும் அவர் விரைவில் மீறவுள்ளார். அமிதாப்பின் அறிவுரையையும் மீறி தற்போது ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது