செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (18:52 IST)

ட்ரைலர் எங்கடா...? லைக்கா நிறுவனத்தை கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.
 
ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் இப்படத்திற்கு  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிபதிவு செய்கிறார்.  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிட்டது. 
 
இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் "சும்மா கிழி" பர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் யூடியூபில் வெளிவந்து நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. அதையடுத்து சமீபத்தில் நடந்த ஆடியோ லான்ச் விழாவை தொடர்ந்து லிரிகள் வீடியோ பாடல்கள் வெளிவந்து பட்டைய கிளப்பியது. இந்நிலையில் இன்று 6:30 மணிக்கு தர்பார் ட்ரைலர் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. ஆனால், குறித்த நேரத்தில் ட்ரைலர் வெளியாகத்தால் நெட்டிசன்ஸ் அனைவரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.