திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 11 ஜூன் 2021 (09:53 IST)

செஸ் சாம்பியனை வீழ்த்துவாரா அமீர் கான்; கொரோனா நிதி திரட்ட விளையாட்டு!

கொரோனா பாதிப்புகளுக்கு நிதி திரட்ட பாலிவுட் நடிகர் அமீர்கான் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்-உடன் செஸ் விளையாட உள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் பலரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு நிதியளித்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பிரபலங்களும் பல்வேறு வகையில் கொரோனா நிதி திரட்டி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா நிதி திரட்டுவதற்காக நடிகர் அமீர் கான், செஸ் விளையாட்டில் சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாட உள்ளார். ”செக்மேட் கோவிட்” என்ற பெயரில் ஜூன் 13ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்கனவே அமீர்கான், விஸ்வநாதன் ஆனந்துடன் செஸ் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.