1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 26 டிசம்பர் 2019 (13:57 IST)

தனுஷ்கோடியில் அமீர்கான் – போலீஸாருக்கு செய்த உதவி !

பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கான் தனது லால்சிங் சிட்டா எனும் படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது தனுஷ்கோடியில் முகாமிட்டுள்ளார்.

ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக்கான லால்சிங் சிட்டா எனும் படத்தில் அமீர்கான் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவரின் நண்பராக தமிழ் நடிகர் விஜய் சேதுபடி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தனுஷ்கோடியில் நடைபெற்று வருகிறது. இதில் ஆமிர்கான் பங்கேற்று நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனுஷ்கோடி போலிஸாரால் ஒருங்கிணைக்கப்பட்ட போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாமில் கலந்துகொள்ள அவர் அழைக்கப்பட்டார். அதில் கலந்துகொண்ட அவர் ‘போதைப் பொருள் பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகிவிடக்கூடாதுவாழ்க்கை ஒருமுறைதான். அதை மகிழ்ச்சியாக வாழ போதையிலிருந்து விலகி இருக்க வேண்டும்’ எனப் பேசினார்.