வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 19 டிசம்பர் 2019 (08:08 IST)

கோயில் கோயிலாக சென்று பரிகார பூஜை செய்யும் சைபராபாத் என்கவுண்ட்டர் கமிஷனர் !

சைபராபாத்தில் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகளை என்கவுண்ட்டர் செய்த கமிஷனர் கோயில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்து வருகிறார்.

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் வல்லுறவு செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சிக்கிய 4 குற்றவாளிகளை சைரதாபாத் போலிஸ் என்கவுண்ட்டர் செய்து சுட்டுக் கொன்றனர். அவர்கள் தப்பிக்க முயன்றதால் என்கவுண்ட்டர் செய்ததாக போலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்த நிலையில்,  வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவெடுத்துள்ளது.

மேலும் நான்கு பேரின் உடல்களை பாதுகாப்ப வைக்க தெலங்கானா உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த என்கவுண்ட்டரில் ஈடுபட்ட சைபராபாத் காவல் ஆணையர் விஸ்வநாத் சென்னப்பா சஜ்ஜனார் தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று பாவ பரிகார பூஜைகள் செய்து வழிபாடு செய்துள்ளார். முன்னதாக இதுபோல அவர் பல கோயில்களுக்கு சென்று பரிகார பூஜைகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.