வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (17:01 IST)

அரசியல் பழிவாங்கும் விளையாட்டு எப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.- மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த இர்பான் பதான் !

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் .

மத்திய அரசின் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. வடகிழக்கு மாநிலங்களைப் போல மேற்கு வங்கத்திலும் போராட்டம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தில் புகுந்த போலிஸார் அவர்களை தாக்கினர்.

மேலும் மர்மக்கும்பல் ஒன்று பேருந்துகளுக்கும் தீ வைத்தது. 2 போலீஸ் வாகனங்களும் எரிக்கப்பட்டன. இந்த மோதலில் 6 காவலர்கள் மற்றும் 35 மாணவர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் மாணவர்களுக்கு ஆதரவாக ‘அரசியல் பழிவாங்கும் விளையாட்டு எப்போதும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். ஆனால், நானும் எனது நாடும் ஜாமியா மிலியா மாணவர்களை எண்ணிக் கவலை கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.