வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj kiyan
Last Updated : செவ்வாய், 17 டிசம்பர் 2019 (19:49 IST)

இரண்டு சூப்பர் ஸ்டார்களும் மௌனமாக இருப்பது ஏன் ...? ஷேம் ஆன் பாலிவுட்... நெட்டிசன்ஸ் கேள்வி !

இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ’இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்’  பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம் ,தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்  மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட எல்லோரும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி, ஜாமியா பல்கலைக் கழகத்தில் நேற்றைய போராட்டத்தின் போதும், மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தாக்குதல் நடத்தியது நாடு தழுவிய அளவில் பெரும் விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், எல்லோரும்  மாணவர்களுக்கு எதிரான தாக்குதலுக்கு குரல் கொடுத்து வரும் வேலையில், டெல்லி ஜாமியா பல்கலைக் கழகத்தின் முன்னாள் மாணவர்களான பாலிவுட் சூப்பர் ஸ்டார்கள் ஷாருக்கான் மற்றும் ஆமீர் கான்  இருவரும் அமைதியாக இருப்பதாக நெட்டின்சகள் அவர்களிடம் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.