1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 டிசம்பர் 2019 (08:46 IST)

குடியுரிமைச் சட்ட திருத்த மசோதா – போராடும் மாணவர்களை தாக்கும் இவர்கள் யார் ?

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லியில் நடக்கும் மாணவர்கள் போராட்டத்தில் போலிஸாருடன் சேர்ந்து சிலர் மாணவர்களை தாக்கி வருகின்றனர்.

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேற்ற்ய் டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள், இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக போராடினர். பல்கலைக் கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்த போலிஸார் அங்கு கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசியும், மாணவர்கள் மேல் தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கலைத்தனர்.

இந்நிலையில் போலிஸ் சீருடை அணியாத வேறு சிலரும் மாணவர்களைத் தாக்கினர், போலிஸார் போல  தலைக்கவசம் மற்றும் புல்லட் ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்த அவர்கள் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.