1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 3 டிசம்பர் 2019 (12:57 IST)

அமீரின் அரசியல் நாற்காலி – புதுப்போஸ்டர் வெளியீடு

இயக்குனர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் நாற்காலி படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக உருவான அமீர் ஆதிபகவன் படத்தின் தோல்விக்குப் பிறகு அதிகமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். வடசென்னை படத்தில் அவர் நடித்த ராஜன் கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதையடுத்து அடுத்ததாக நாற்காலி என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அரசியல் கதைக்களம் கொண்ட படமாக உருவாகி வரும் நாற்காலி படத்தை முகவரி, தொட்டி ஜெயா ஆகிய படங்களை இயக்கிய வி. இசட். துரை இயக்கியுள்ளார்.