கொரோனாவில் இருந்து மீண்டாலும்… சூர்யா அச்சத்தால் மாறும் லொகேஷன்!

mahendran| Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (16:20 IST)

சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தின் லொகேஷன் சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளதாம்.

சூர்யாவின் 40 ஆவது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார்.
இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க டி இமான் இசையமைக்க உள்ளர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க முக்கியமானக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அரசு கட்டுபாடுகளோடு திரைப்படங்களின் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. அதையடுத்து சூர்யா 40 படத்தின் படப்பிடிப்பு ஜூலை 2 ஆம் வாரம் முதல் புதுக்கோட்டையில் தொடங்க உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ஒரே கட்டமாக மீதமுள்ள காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாம்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சூர்யா முழுமையாக குணமாகிவிட்டாலும், மேலும் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதால் படப்பிடிப்புத் தளத்தை சென்னைக்கு பாதுகாப்பாக மாற்றியுள்ளதாம் படக்குழு. விரைவில் சென்னையில் சூர்யா 40 படக்குழு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :