வாடிவாசல் எப்படி இருக்கும் என அப்டேட் கொடுத்த கலைப்புலி தாணு!

Last Modified திங்கள், 5 ஜூலை 2021 (16:40 IST)

வாடிவாசல் படத்தை பாகுபலி போல உருவாக்க உள்ளதாக தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் சூரரைப் போற்று
திரைப்படத்துக்குப் பிறகு அவர் வெற்றி மாறன் இயக்கத்தில் தாணு தயாரிப்பில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என சொல்லப்பட்டது. அந்த படத்துக்கான போஸ்டர் கூட வெளியானது. ஆனால் இப்போது சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார். அதற்கடுத்தும் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல வெற்றிமாறனும் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதனால் வாடிவாசல் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு வாடிவாசல் படத்தைப் பற்றி பேசும்போது படத்தை பாகுபலி போல பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :