வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 26 ஜனவரி 2020 (08:59 IST)

சசிகுமார், அமலாபால் படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 2 முதல் 5 திரைப்படங்கள் வெளியாகி கொண்டு வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகிய ’தர்பார்’ மற்றும் ’பட்டாஸ்’

கோலிவுட் திரையுலகில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 2 முதல் 5 திரைப்படங்கள் வெளியாகி கொண்டு வருகின்றன என்பது தெரிந்ததே. கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகிய ’தர்பார்’ மற்றும் ’பட்டாஸ்’ ஆகிய திரைப்படங்கள் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இருப்பினும் கடந்த வெள்ளியன்று உதயநிதியின்  ’சைக்கோ’ மற்றும் சேரனின் ‘ராஜாவுக்கு செக்’ ஆகிய திரைப்படங்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வரும் 31-ஆம் தேதி சசிகுமார் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கிய ’நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் டிரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் மீது படக்குழுவினர் பெரும் நம்பிக்கை வைத்துள்ளனர் 
 
அதேபோல் அமலாபால் நடிப்பில் உருவான ’அதோ அந்த பரவை போல’ என்ற படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் அமலாபாலின் நடிப்பிற்கு பாராட்டுக்கள் குவிந்து என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள அதே நேரத்தில் இதே தேதியில் ஹிப்ஹாப் தமிழாவின் ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படமும் அசோக் செல்வன்  நடித்த ‘ஓ மை கடவுளே’ என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது