வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 ஜனவரி 2020 (20:46 IST)

காதலர் தினத்தில் வெளியாகும் பிரபல இசையமைப்பாளரின் படம்!

இசையமைப்பாளர்களான ஜிவி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் ஹீரோவாகவும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அதேபோல் தற்போது இன்னொரு இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதியும் ஹீரோவாக வெற்றி நடை போட்டு வருகிறார். அவர் நடித்த முந்தைய படங்களான ’மீசையை முறுக்கு’ மற்றும் ’நட்பே துணை’ ஆகிய இரண்டு படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது 
 
சுந்தர் சி-குஷ்புவின் அவ்னி மூவிஸ் தயாரித்த ’நான் சிரித்தால்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த புரமோஷன் பணிகள் ஆரம்பமாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு சான்றிதழ் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஹிப்ஹாப் தமிழா ஆதி ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருக்கும் இந்த படத்தில் முனிஷ்காந்த், எருமசாணி விஜய், கேஎஸ் ரவிக்குமார், பாண்டியராஜன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரானா என்ற இயக்குனர் இயக்கி உள்ளார்