வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (15:53 IST)

பாலிவுட் ட்ரண்ட்டில் இணைந்த ஆலியா பட்… கர்ப்பகால போட்டோஷுட்… வைரல் புகைப்படங்கள்!

ஆலியா பட் ரன்பீர் கபூர் தம்பதிகள் தங்கள் முதல் குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

பாலிவுட்டின் பிரபல நடிகர் ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர். பாலிவுட்டில் முன்னணி நடிகராக இவர் வலம் வருகிறார். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான மகேஷ் பட்டின் மகளும், முன்னணி நடிகையுமாவார் ஆலியா பட். இவரும் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

இதையடுத்து இப்போது சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இதையடுத்து அவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்க உள்ளது. இந்நிலையில் பாலிவுட் வழக்கப்படி ஆலியா பட் கர்ப்பகால போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.