திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (10:57 IST)

மீண்டும் அக்‌ஷய் குமாருடன் இணையும் இயக்குனர் பிரியதர்ஷன்!

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் அக்‌ஷய்குமார் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் பிரியதர்ஷன் மலையாளத்தில் எப்படி மோகன் லாலோடு வெற்றிக் கூட்டணி அமைத்தாரோ அதே போல இந்தியில் அக்‌ஷய் குமாரோடு வெற்றிக் கூட்டணி அமைத்தார். இவர்கள் கூட்டணியில் 2000 களில் வெளியான ஹேரா பேரி", "கரம் மசாலா", "பூல் புலையா"  ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. ஆனால் அவர்கள் இருவர் கூட்டணியில் சமீபத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்போது அக்‌ஷய் குமார் மற்றும் பிரியதர்ஷன் சந்திப்பு நடந்துள்ளதால் விரைவில் அவர்கள் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இந்த அறிவிப்பு பாலிவுட் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.