1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 6 ஜூலை 2021 (09:59 IST)

தனுஷ் & கார்த்திக் நரேன் படத்தின் போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட்!

நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் இப்போது நடந்து வருகிறது.

ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை இயக்கிய ரஸோ பிரதர்ஸ் இயக்கும் தி க்ரே மேன் படத்தில் நடிக்க நடிகர் தனுஷ் ஒப்பந்தமானார். அதை தொடர்ந்து சில மாதங்கள் முன்னர் அமெரிக்கா சென்ற தனுஷ் தொடர்ந்து க்ரேமேன் படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தார்.

ஹாலிவுட் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் இந்தியா திரும்பிய தனுஷ் அடுத்தக்கட்டமாக கார்த்தி நரேன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இன்று முதல் ஈடுபடுகிறார். டி43 என்ற பெயரிடப்படாத படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்து வருகின்றனர், ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் இப்போது ஐதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிய உள்ள நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.