கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர்… தயாரிப்பது இந்த நடிகைதானாம்!

Last Modified செவ்வாய், 6 ஜூலை 2021 (09:53 IST)

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விரைவில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளாராம்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி இசையமைப்பாளராக இருந்தவர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் இவர் இசையமைத்த வில்லு, கந்தசாமி, சிங்கம், வேங்கை, வீரம் மற்றும் சிங்கம் ஆகிய படங்கள் கமர்ஷியலாக வெற்றி பெற்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழை விட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி படங்களுக்கு இசையமைத்து வந்தார்.

இந்நிலையில் இப்போது இவர் ஜி வி பிரகாஷ் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோரைப் போல கதாநாயகன் அவதாரம் எடுக்க உள்ளாராம். அந்த படத்தை அவரின் நெருங்கிய தோழியான நடிகை ஷார்மிதான் தயாரிக்க உள்ளாராம்.இதில் மேலும் படிக்கவும் :