அக்ஷரா ஹாசனின் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு… நேரடி ஓடிடி ரிலீஸ்?
நடிகை அக்ஷரா ஹாசன் நடித்துள்ள புதிய படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளது.
கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷராஹாசன் நடித்து இயக்குனர் ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் “அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு”. இந்த படத்தை ட்ரெண்ட் லௌட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் மால்குடி சுபா, உஷா உதுப், அஞ்சனா ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முழுக்க பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் பெண்கள் எதை பேச வேண்டும்? எதை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி பேசுவதாக தெரிகிறது. இந்த படத்தின் ட்ரெய்லரை கமல்ஹாசன் தனது வெளியிட நல்ல கவனத்தைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக மார்ச் 25 ஆம் தேதி முதல் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
அக்ஷரா ஹாசன், கமல்ஹாசன், ப்ரைம். Akshara haasan, kamalhaasan, prime
Akshara haasan movie to be releasing in ott