1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 21 பிப்ரவரி 2020 (17:08 IST)

மாலை போட வந்த அஜித் வேண்டாமென்று போன சொந்தங்கள் - வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவின் அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் திரைத்துறையில் உச்ச நடிகராக இருந்து வ்ருகிறார். படங்களில் தலை காட்டுவதுடன் சரி வேறு எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்காததால் என்னவோ அவரை வெளியில் எங்காவது பார்த்தாலே ரசிகர்கள் பரவசப்படுகின்றார். 
 
அந்த வகையில் நடிகர் அஜித் இன்று உதவியாளர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அஜித் மாலையுடன்மண்டபத்தின் நுழைவு வாயிலில் நின்றுக்கொண்டு வருபவர்களை வரவேற்கும் விதத்தில் மாலை போட முயற்சிக்கிறார். ஆனால் யாரும் அதை அணிந்துகொள்ளாமல் வேண்டாமென்று சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார்கள். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது. 
 
இதனை கண்ட விஜய் ரசிகர்கள் " வீட்டிலே இருக்கிறேன்னு கிண்டல் பண்ணுறீங்க... சரி வெளியே வரலாம்னு வந்தால் இப்படி ஓட்டுறீங்க எப்படி வெளியில் வர தோணும் " என மேனிக்கு கமெண்ட்ஸ் செய்து  ட்ரோல் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ...