திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 பிப்ரவரி 2020 (20:20 IST)

அஜித் விரைவில் குணமாக பிரார்த்தனை செய்த ‘மாஸ்டர்’ நடிகர்

தல அஜித் வலிமை படத்தின் படப்பிடிப்பில் இருந்தபோது மோட்டார் சைக்கிள் சேசிங் காட்சி ஒன்றில் நடித்தபோது காயமடைந்தார் என்றும் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தது 
 
இந்நிலையில் அஜித் விரைவில் குணமாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இது குறித்த ஹேஷ்டேக் இன்று உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் மாஸ்டர் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சாந்தனு, அஜித் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்வதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
தல அஜித் அவர்கள் விரைவில் நல்ல உடல் நலம் பெற வாழ்த்துக்கள் என்றும் சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் ரிஸ்க் எடுக்கும் நடிகர் அவர் விரைவில் உடல் நலம் பெற பிரார்த்திக்கிறேன் வேண்டும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் சாந்தனுவின் இந்த டுவீட்டுக்கு அஜித் ரசிகர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது